தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அவித்த முட்டை, சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு'- தூத்துக்குடியில் பார் நடத்தியவர் கைது! - Corona guidelines

தூத்துக்குடியில் மதுப்பிரியர்களுக்கு அவித்த முட்டை, சுண்டல், கொய்யா, வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருள்களை விற்பனைக்கு வைத்து பார் நடத்தியதாக துரை என்பவரை போலீசார் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

bar
பார் நடத்தியவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவலர்

By

Published : Aug 29, 2021, 3:39 AM IST

தூத்துக்குடி : கரோனா விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மதுக்கடையில் பார் நடத்திய நபர் போலீசாரின் திடீர் சோதனையில் சிக்கினார்.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்கடையுடன் சேர்த்து பார் செயல்படுவதாக புகார் எழுந்தது.

மது அருந்த தேவையான கிளாஸ் உள்ளிட்ட பொருள்கள்

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மதுக்கடையில் சோதனை நடத்த மத்திய பாகம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

வெள்ளரிப் பிஞ்சு

திடீர் சோதனை

இதையடுத்து பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கரோனா விதிமுறைகளை மீறி பார்

அப்போது கடையின் உள்ளே மதுப்பிரியர்களுக்கு அவித்த முட்டை, சுண்டல், கொய்யா, வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருள்களை விற்பனைக்கு வைத்து பார் நடத்தியது தெரியவந்தது.

அவித்த முட்டை

விசாரணை

இதையடுத்து அரசு விதிகளுக்கு புறம்பாக பார் நடத்திய கடை ஒப்பந்ததாரர் துரை என்பவரை போலீசார் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விதிமீறி செயல்பட்ட பாரில் காவலர் விசாரணை

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், “தூத்துக்குடியில் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான பால விநாயகர் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை கரோனா விதிகளுக்கு புறம்பாக பார் செயல்பட்டு வருகிறது.

கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசின் அறிவிப்பு இல்லாமல் மதுக்கடையுடன் சேர்த்து பார் நடத்துவது மிகவும் வருந்தத்தக்கது.

சுண்டல்

இரவு நேரங்களிலும் இந்தக் கடையில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. சிலர் இங்கேயே மது குடித்துவிட்டு போதையில் மயங்கி கீழே விழுந்து கிடக்கின்றனர்.

மேலும் சுகாதாரமற்ற முறையிலும் கடை செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க :கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

ABOUT THE AUTHOR

...view details