தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பேருந்துக்குள் நடந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், “சமீப காலமாகச் சாதியின் பெயரைச் சொல்லி, சமூகத்தை இழிவுபடுத்தி குண்டர்கள் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கயத்தாறு அருகே பேருந்துக்குள் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 19 பேர், கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் உள்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் மனுமாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துள்ளோம்” என்று கூறினர்.