தூத்துக்குடி:தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், காற்றாலை இறகு மற்றும் உதிரி பாகங்கள் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2 ஆயிரத்து 898 காற்றாலை இறகுகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன.
உலகத்தரம் வாய்ந்த காற்றாலை இறகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் உள்ள இட வசதிகள், எட்டு வழி துறைமுக இணைப்பு சாலை, சீரான தேசிய நெடுஞ்சாலை இணைப்பு போன்ற அம்சங்களை கருத்திற்கொண்டு, வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கின்றன.
அதன்படி, வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.