தூத்துக்குடி:குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் இரண்டாம் நாளான இன்று திருநாள் அம்மன் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவின் 2 வது நாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருச்சகம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்.. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குலசேகரன்பட்டினம் பகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் அக்.5 ஆம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்