தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிலம்பாட்டத்தில் கோவில்பட்டி மாணவ- மாணவியர்கள் சாதனை - கோவில்பட்டி

கோவில்பட்டியில் வீரத்தமிழன் சிலம்பாட்டக் குழுவின் சார்பில் சிலம்பாட்டத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் ஈடுபட்டு உலக சாதனை முயற்சியில் 30 பேர் பள்ளி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.

Silambattam
Silambattam

By

Published : Nov 14, 2021, 5:04 PM IST

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு நடைபெற்ற வீரத்தலைவன் சிலம்பாட்டக் குழுவில் பயிற்சி பெற்று வரும் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சிலம்பாட்ட உலக சாதனை முயற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கிராமப்புற வாரிய தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சைலஜா கணேஷ் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவர், மாணவிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியை, நகர நிலவரி திட்ட வட்டாட்சியர் ராஜ்குமார் தொடங்கிவைத்தார்.

சிலம்பாட்டத்தில் கோவில்பட்டி மாணவ- மாணவியர்கள் சாதனை

இதையடுத்து, பள்ளி மாணவர்கள் 30 பேர் ஒரு குழுவில் 5 பேர் முறையில் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மணி நேரம் விடாமல் 6 மணி நேரம் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : சிலம்பத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம்!

ABOUT THE AUTHOR

...view details