தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மீனா ஆகியோர் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாணவரிடம் சாதி குறித்து பேசிய உதவி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! - kolathur government school teacher suspended in tuticorin
விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி மாணவரிடம் சாதி குறித்து பேசிய உதவி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
![மாணவரிடம் சாதி குறித்து பேசிய உதவி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! துணைத் தலைமை ஆசிரியை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15576166-thumbnail-3x2-a.jpg)
துணைத் தலைமை ஆசிரியை
இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, மீனா ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்