தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது' - கனிமொழி - அழகுமுத்துக்கோன் மணிமண்டபம்

தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது என கனிமொழி எம்.பி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது' - கனிமொழி
'தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது' - கனிமொழி

By

Published : Jul 11, 2021, 6:04 PM IST

Updated : Jul 11, 2021, 7:53 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தி‌ல் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் மணி மண்டபத்தில் இன்று (ஜூலை.11) அவரது 311ஆவது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பான ஆட்சி

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ்நாடு பாதுகாப்பான ஆட்சியின் கீழ் உள்ளது. தமிழ்நாட்டைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Last Updated : Jul 11, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details