தூத்துக்குடி: தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சகோதரர் சுதானந்தன், தூத்துக்குடி கேடிசி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் நடந்த கோயில் விழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) காலை அவரது ஓட்டுநர் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக சுதானந்தனுக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
ரூ.5 லட்சம் திருட்டு