தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் மாணவர்களுக்கான ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இன்றிலிருந்து வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மாநாடு

By

Published : Sep 20, 2019, 9:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கே.ஆர்.இன்னோவேஷன் சென்டர், என்.இ.சி.பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவர்களுக்கான ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறயிருக்கிறது.

கோவில்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் உச்சி மாநாடு

இதில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைப்பு உதவியுடன் நடைபெறும் இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், என்.இ.சி.- பிசினஸ் இன்குபேட்டரின் தலைமை நிர்வாக ஆலோசகர் ஜி.வினோத், ஓ.ஹெச்.ஓ அகாடமியின் நிர்வாக இயக்குநர் வித்யாசாகர் கணேஷ், எஸ்ஏபி பி2 ஆலோசகர் எழில், சிங்கப்பூர் வியாசகா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் வள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மாநாடும், தொழில்நுட்பங்களைப் பற்றி பல்வேறு நிபுணர்களின் விரிவுரை அமர்வுகளும் நடைபெற உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details