தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - கலவரம் - குற்றப்பத்திரிகையில் உள்ள 71 பேர் யார் யார்?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவலர் அல்லாத 71 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. சிபிஐ தாக்கல்செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பெயர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

By

Published : Mar 24, 2021, 7:10 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22ஆம் தேதி கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தது. சர்வதேச அளவில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று வர்ணிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டன. எனவே இது குறித்து நீதி விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்திவருகிறது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழ்நாடு சிபிசிஐடி காவலர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். சிபிசிஐடி காவலர்கள் விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கலாம் எனக் கருதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் சிபிஐ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையில் முதற்கட்டமாகக் காவலர்கள் அல்லாத பொதுமக்கள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நிறைவுபெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் சிபிஐ தரப்பில் விசாரணை நிறைவடையாத நிலையில் தற்போது கூடுதலாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கைத் தாக்கல்செய்துள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசு அலுவலர்களுக்கு எதிராகப் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல், கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் காவலர்கள் அல்லாமல் மொத்தம் 71 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சிபிஐ தாக்கல்செய்துள்ள இந்த அறிக்கையில் காவலர் ஒருவரின் பெயரும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் குறித்த வேறு எந்தத் தகவல்களும் சொல்லப்படவில்லை.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பெயர்கள், அவரது விவரம் வருமாறு:-

வ.எண். பெயர் தந்தை பெயர் கிராமம்
01 விக்னேஷ் குமார் என்ற முனீஷ் குமார் சிதம்பரநகர்
02 அருண் என்ற ஜோக்கர் ராஜா சுப்பிரமணியன் மடத்தூர்
03 மாரிமுத்து என்ற சுவாமிகள் ஆறுமுகம் முத்துகிருஷ்ணபுரம்
04 செந்தில் குமார் சிதம்பரம் மாதவன்நகர் மேற்கு அய்யனடைப்பு
05 காமராஜ் கணேசன் முத்துகிருஷ்ணாபுரம்
06 நிலவுடையார் சண்முகசுந்தரம் முனியசாமி நகர்
07 துரைபாண்டி தங்கவேல் போடம்மாள்புரம்
08 சக்திவேல் வடிவேல் விஇ ரைஸ் மில் சாலை
09 பிரவீன் பால்ராஜ் பூபாலபுரம்
10 ரோபஸ்ட் கிளைமண்ட் திரேஸ்புரம்
11 பெரியசாமி ரமேஷ் எட்டயபுரம்
12 வளன் என்ற அம்புரோஸ் அந்தோணி சாமி மேட்டுப்பட்டி
13 நித்யானந்தம் சந்திரன் கிரேட் காட்டன் ரோடு (மேற்கு)
14 ஐயப்பன் இசக்கிமுத்து அன்புநகர்
15 ராபர்ட் என்ற ஜேம்ஸ் ராபர்ட் நாக்ஸ் அந்தோணி பிச்சை பூபாலராயபுரம்
16 ஆனந்த் பனிமயராஜ் பனிமயநகர்
17 நிக்கோலஸ் டென்னின்ஸன் நவமணி தருவைகுளம்
18 அஸ்வின் மணி பண்டாரம்பட்டி
19 கோகுல் பிரசாந்த் கணேச மூர்த்தி ராஜகோபால்நகர்
20 சார்லஸ் வினோத் ராஜ் அந்தோணி சாமி திரேஸ்புரம்
21 முத்து ராஜ் சேவியர் திரேஸ்புரம்
22 மணி பேச்சிமுத்து முத்துகிருஷ்ணாபுரம்
23 அந்தோணி பிரபு ஃபிரான்சிஸ் பூபாலராயபுரம்
24 பரமசிவன் சண்முகம் பிஎன்டி காலனி
25 எட்வர்ட் ஸ்டீபன் ஆகாஷ் மில்டன் ராமநாடார் விளை தெரு
26 ராமகிருஷ்ணன் அரிபுரதிரன் கோடம்பள்ளம்
27 செந்தில் குமார் நாகராஜன் ரகமுத்தாலபுரம்
28 புல்டான் ஜெசின் பாஸ்கர் பாத்திமா நகர்
29 செல்வம் பாப்பு இனிகோ நகர்
30 அம்பரீஷ் அந்தோணி ராஜ் இனிகோ நகர்
31 பழனி சிந்தாமணி அய்யர் விளை
32 பெரியசாமி கணேசன் கிருஷ்ணராஜபுரம்
33 முகம்மது இப்ராஹிம் முகம்மது யூசுப் திரேஸ்புரம்
34 கிஷோர் ஜேரோன் பனிமயநகர்
35 ஜேசு பனிமய ஜான் மேத்யூஷ் திரேஸ்புரம்
36 ஜேரோம் ரோமன்ஸ் திரேஸ்புரம்
37 ராமர் ராஜபாண்டி நாடார் மடத்தூர்
38 அஸ்வின் செல்வன் குரூஸ்புரம்
39 சந்தோஷ் ராஜ் கருவேலன் பண்டாரம்பட்டி
40 ராஜா என்ற புல்கை ராஜா ஃபிரான்சிஸ் சண்முகபுரம்
41 மாடசாமி செல்வம் மேட்டுப்பட்டி
42 பிரபாகர் சகாயராஜ் திரேஸ்புரம்
43 சயீத் முஸ்தபா ஜமால்தீன் சங்குலி காலனி
44 சுகுமார் மணி மில்லர்புரம்
45 சுர்ஜித் சிலுவை அந்தோணி சேவியர் பனிமயநகர்
46 மகேந்திரன் சுப்பையா பூபாலராயபுரம்
47 சுரேஷ் ஜெஸ்டின் பூபாலராயபுரம்
48 நஷ்ரின் அமலதாசன் திரேஸ்புரம்
49 மரிய தேவ சகாய ஜான் லூயிஸ் ரோச் காலனி
50 விமல் தஸ்நேவிஸ் லூர்தம்மாள்புரம்
51 இனிகோ பீட்டர் தட்டார் தெரு விரிவாக்கம்
52 கெனிஸ்டன் சூசையா திரேஸ்புரம்
53 பாலமுருகன் குமாரசாமி கதிர்வேல் நகர்
54 சண்முக சுந்தரம் மாடசாமி சிவாநந்தகுளம்
55 அந்தோணி சுரேஷ் பீட்டர் திரேஸ்புரம்
56 மரிய இருதய ராபர்ட் விஜய் அந்தோணியப்பா பாத்திமா நகர்
57 இருதய ஜெயமாலை சத்ய அற்புதம் தாளமுத்து நகர்
58 சுரேஷ் ஸ்டீபன் திரேஸ்புரம்
59 கிராஸ்வின் அஷ்கர் வடக்கு ராஜா தெரு, மதுரா கோர்ட்ஸ் மில்
60 பிரான்சிஸ் அந்தோணி சாமி ராஜிவ் நகர்
61 பழனி குமார் லோகநாதன் கேடிசி நகர்
62 இக்பால் கபீர் திரேஸ்புரம்
63 முத்துகுமார் முருகேசன் தாளமுத்து நகர்
64 விமல் ராஜ் அந்தோணி ராஜ் கிருஷ்ணராஜபுரம்
65 அமலநாதன் அந்தோணி பிச்சை திரேஸ்புரம்
66 பென்ஹர் அலோய் பாத்திமா நகர்
67 அஞ்ஜலன் செல்வம் பாத்திமா நகர்
68 வினீத் வில்பிரட் இனிகோ நகர்
69 ஆனந்த குமார் பால்மணி மீனாட்சிபுரம்
70 மனோகரன் ஜீவா எழில்நகர்
71 குணசேகர் கோபாலகிருஷ்ணன் பாக்கியலட்சுமி நகர்

இவ்வாறு சிபிஐ தாக்கல்செய்துள்ள குற்றபத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details