நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துளுக்கர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு(30). இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியிலுள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பகவதி(29) பணியாற்றி வந்தார்.
பகவதிக்கு 9 வயது, 6 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்பாபுக்கும் - பகவதிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் முருகனுக்குத் தெரியவரவே பகவதியைக் கண்டித்துள்ளார்.
தாயை தகாத வார்த்தையில் திட்டிய தாய்மாமனை கருங்கல்லால் குத்திக் கொலை செய்த மகன்!
இதைத்தொடர்ந்து, பகவதி வேலைக்குச் செல்லாமல் ரமேஷ்பாபுவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இந்த சூழலில் இன்று வழக்கம் போல் வேலைக்காகத் தூத்துக்குடி வந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ரமேஷ்பாபு, கத்தியால் பகவதி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நபரைத் தாக்கிய திமுக பிரமுகர்!
சத்தம் கேட்டு வந்த ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷ்பாபுவை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். வயல்வெளி அருகே உள்ள நன்செய் நிலத்துக்குள் புகுந்து ரமேஷ்பாபு ஓடமுயற்சிக்கும் போதே தானும் கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் சிறிது தூரம் ஓடியபடியே மயங்கி கீழே விழுந்தார்.
உயிரை பறித்த திருமணதிற்கு மீறிய பந்தம் இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிக ரத்தப் போக்கின் காரணமாக ரமேஷ்பாபு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நேரத்தில் உயிரிழந்தார். பகவதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினர் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.