தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்கள் வேட்பாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னமாக கிடைத்துள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில்நான் போட்டியிடுகிறேன். வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய நிலை உள்ளது. எனவே அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க பணம் தரப்பட்டால் அது இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் தலைகுனிவு.
வாக்குக்கு பணம் தரப்பட்டால் அது தேர்தல் ஆணையத்திற்கு தலைகுனிவு! - கிருஷ்ணசாமி
தூத்துக்குடி: தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு பணம் தரப்பட்டால் அது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய தலைகுனிவு என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
krishnasamy
ஆறு பிரிவுகளை உள்ளடக்கிய பட்டியலினத்தவர்களை வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது புதிய தமிழகம் கட்சி தான். ஆனால் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றாமலேயே நாங்கள் அதை செய்து விட்டோம் என சொல்வதை ஏற்க முடியாது. பட்டியலின மக்களின் கோரிக்கையினை சரியாக புரிந்து கொண்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது ஒன்றே இதற்கு தீர்வாகும்” என்றார்.
இதையும் படிங்க:'விசில்' அடிக்க அழைக்கும் மயில்சாமி!