தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவில்பட்டி அருகே துளசி மாடத்தை அகற்ற பாஜக, இந்து முன்னணியினர் எதிர்ப்பு - இந்து முன்னணி

தூத்துகுடி : கோவில்பட்டி அருகே உள்ள துளசி மாடத்தை அகற்ற இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக, இந்து முன்னணியினர் எதிர்ப்பு
பாஜக, இந்து முன்னணியினர் எதிர்ப்பு

By

Published : Dec 1, 2020, 7:14 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகரில் சிலர் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தனர். வீட்டு வசதி வாரியம் சார்பில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் துளசி மாடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துளசி மாடத்தை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து துளசி மாடத்தை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, வட்டாட்சியர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் அய்யப்பன், முத்து, சுகாதேவி மற்றும் அலுவலர்கள் துளசி மாடத்தை அகற்றுவதற்காக அப்பகுதிக்கு சென்றனர்.

இதனை அறிந்த இந்து முன்னணி நகர செயலாளர் சுதாகர், பாஜக மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள் துளசி மாடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அலுவலர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய அவர்கள் 15 நாட்கள் அவகாசம் கோரினர். இதை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்கள் வரும் 4ஆம் தேதிக்குள் துளசி மாடத்தை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழி ஒளிபரப்புக்கு தடை விதிக்கக் கோரி முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details