தூத்துக்குடி: கல்லுவிளையைச் சேர்ந்த சிறுமி பாலியல் வண்புணர்வு செய்யப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் அருகே கல்லுவிளையில் பக்கத்து வீட்டிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க சென்ற சிறுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் முத்தீஸ்வரன், நந்தீஸ்வரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 7 வயது சிறுமி கொடூரக் கொலை - 2 இளைஞர்கள் கைது
இந்த விவகாரத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (ஜூலை17) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமி அருகேயுள்ள வீட்டிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க செல்வது வழக்கம். அதனடிப்படையில் அன்றும் சென்றுள்ளார்.
நெல்லையில் 7 வயது சிறுமி கொலை: உடலை வாங்க விசிக மறுப்பு!
அப்போது அந்த வீட்டில் இருந்த இளைஞர் முத்தீஸ்வரனுக்கும், அவருடைய மனநலம் பாதிக்கப்பட்ட தந்தைக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் சிறுமி அங்கு சென்று தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்று கூறியதில் ஆத்திரமடைந்த முத்தீஸ்வரன் சிறுமியை கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் மயக்கமடைந்து விழுந்த சிறுமியை நீர்பிடித்து வைக்கும் பாத்திரத்தில் வைத்து அடைத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதனுள்ளே இருந்ததால் சிறுமி மூச்சுத்திணறி இறந்துள்ளார். தொடர்ந்து நண்பர் நந்தீஸ்வரன் உதவியுடன் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடலை வீசிச் சென்றுள்ளார் முத்தீஸ்வரன்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி இச்சம்பவத்தில் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், உடற்கூறாய்வு அறிக்கையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி படவில்லை என்பது தெரியவந்துள்ளது.