தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடியில் முழு ஊரடங்கு தீவிரம் - கொரோனா தொற்று பாதிப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுக் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 30 சோதனை சாவடிகளில் 1200 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் முழு ஊரடங்கு தீவிரம்
தூத்துக்குடியில் முழு ஊரடங்கு தீவிரம்

By

Published : Jan 10, 2022, 10:02 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவிவருகிறது. இதனைக்கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை, திருமணம், துக்க நிகழ்ச்சி போன்றவைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி என கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் நோய் கட்டுபாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று(ஜன.9) தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதலே கடைகள் அடைக்கப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 30 சோதனை சாவடிகளில் 1200 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊரடங்கு சமயத்தில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவோரை எச்சரிப்பதுடன், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படடது.

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைக்கு பணிகளுக்கு செல்லக்கூடியவர்கள் அடையாள அட்டையுடன் பயணிக்கவும், இதுபோல் திருமணத்திற்கு செல்வோர் அதற்கான அழைப்பிதழ்களை உடன் வைத்திருக்கவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: Full Curfew: வெறிச்சோடிய விருதுநகர் மாவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details