தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீனவர்கள் உதவி தொகை உயர்வு குறித்து பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு - அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - fishermen's subsidy increase decision

தூத்துக்குடி: மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரண உதவி தொகை உயர்த்துவது தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
கரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

By

Published : Jun 14, 2021, 5:44 PM IST

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட மேல கூட்டுடன் காடு பகுதியில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டத்தை இன்று (ஜூன்.14) அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 6 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவைகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாரதார நிலையம் மற்றும் தடுப்பூசி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ளவேண்டும், மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து 15 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல உள்ள நிலையில், அவர்களுக்கு தடைகால நிவாரணம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது போன்று மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் உயர்த்துவதற்கான நடவடிக்கை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சரால் அறிவிக்கப்படும். மீனவர்களுக்கான தனி நலவாரியத்தில் மீன்பிடி தொழில் சார்ந்த அனைவரையும் சேர்த்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிற கல்லூரிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கும்போது மீன்வள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாமில் தூத்துக்குடி இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details