தூத்துக்குடி அடுத்த தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டனுக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அந்தோணி மிக்கேல் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், உள்ளிட்ட 8 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
எதிா்பாரதவிதமாக, மாலத்தீவின் எல்லைப் பகுதியான குல்குதுபுசி தீவு அருகே சென்றுவிட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, மாலத்தீவு கடலோர காவல் படையினா் படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் பிடித்துச் சென்றனா்.