தூத்துக்குடி: விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் பார்த்திபன் 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட நாளில் மீனவர்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, இன்று (செப். 2) ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்மீனவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர்கள் சங்கச்செயலாளர் ஜவகர், ”மீனவத்தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக, உரிமையை மீட்பதற்காக, மீனவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காக இன்னுயிர் நீத்த தலைவர் பார்த்திபன் ஏழாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்கிறோம்” எனக் கூறிய அவர் முதலமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார்.
அக்கோரிக்கைகளான,
”முதலாவதாக தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில், அடிப்படை உரிமைகள் இன்று வரை செய்யப்படாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலுக்கு போகின்ற சமயத்தில், எங்களுடைய பாதுகாப்பு பெரியளவில் கேள்விக்குறிதான். மீனவர்களைக் காப்பாற்றக் கூடிய படகு கரை ஓரமாக பழுது ஏற்பட்டு, துருப்பிடித்த நிலையில் உள்ளது.