தூத்துக்குடி மாவட்டம் வஊசி மார்க்கெட் அருகே தட்டச்சு பள்ளி மற்றும் ஜெராக்ஸ் கடை செயல்பட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடை பூட்டி இருந்த நிலையில் இன்று மாலையில் திடீரென கடையிலிருந்து புகை வெளிவந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம் - ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம்
தூத்துக்குடி: தட்டச்சு பள்ளியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 3 லட்சம் மதிப்பிலான ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.
![ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம் ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6683307-1094-6683307-1586169395983.jpg)
ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம்
ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம்
இரு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து மத்திய பாகம் போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது என தெரியவந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான ஜெராக்ஸ் இயந்திரங்கள் மற்றும் தட்டச்சு இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
TAGGED:
xerox,shop,fire,accident,vis