தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பார்த்தீனியச் செடிகளை அழிக்க விவசாயிகள் கையில் எடுத்த நூதனப் போராட்டம்! - பார்த்தீனிய செடிகள் அழிப்பு

தூத்துக்குடி: பார்த்தீனியச் செடிகளை அழிக்க வலியுறுத்தி முகத்தில் முகமூடி அணிந்து, பார்த்தீனிய செடிகளுடன் கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

farmers protest against toxic plant  toxic plant in tuticorin  farmers protest against toxic plant in tuticorin  பார்த்தீனிய செடிகள் அழிப்பு  விவசாயிகள் போராட்டம் தூத்துக்குடி
பார்த்தீனிய செடிகள் அழிப்பு

By

Published : Dec 2, 2019, 10:20 PM IST

தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை பார்த்தீனியச் செடிகளுடன் வந்து முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் வேளாண் விரிவாக்க மையக் கண்காணிப்பாளர் ராஜூவிடம் வழங்கிய மனுவில், '' கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைச் சுற்றி ஏராளமான அளவில் பார்த்தீனியச் செடிகள் முளைத்து, தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளது. இதன் மகரந்தத் தூளானது நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது.

நெகிழியை ஒழிக்க இளைய சமூகத்தினரால் மட்டுமே முடியும் - மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார்

இந்தச் சூழலில், இச்செடிகளை அழிப்பதற்கான விழிப்புணர்வு இதுவரை அரசு சார்பில் ஏற்படுத்தப்படவில்லை. இந்தச் செடிகள் மானாவாரி நிலங்களில் அதிகளவு வளர்ந்து விவசாயத்தையும் பாதித்து வருகிறது. எனவே, பார்த்தீனியச் செடிகளை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனக்குறைவால் வந்த இந்த விதையால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலங்களிலிருந்து பார்த்தீனியச் செடிகளை அழிக்க, ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் மாநில அரசு வழங்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details