தூத்துக்குடி: கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி மரணடைந்ததற்கு கறுப்பு பூஞ்சை நோய் காரணமில்லை என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரான 57 வயது நபருக்கும், அவருடைய மனைவிக்கும் சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கறுப்புப் பூஞ்சை நோயா?
இவ்வேளையில், பட்டறை உரிமையாளர் தனது இரண்டு கண்களையும் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (மே 20) உயிரிழந்தார்.
அவர் கரோனாவால் உயிரிழந்தாரா? அல்லது கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்தாரா என்பது குறித்து சரியான தகவல்கள் வெளியாகாத நிலையில், கறுப்பு பூஞ்சை நோய் தாக்கத்தினால் தான் அவர் இறந்தார் என உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.
மருத்துவக் கல்லூரி முதலவர் மறுப்பு
இதற்குமருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "கரோனா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றினால் இறக்கவில்லை. அவர் கரோனா எதிர்வினை பாதிப்பு காரணமாகவே இறந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், கண் மருத்துவத் துறையின் சிறப்பு மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அரசு விதிமுறைகளின்படி அவருக்கு கரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டிருந்தாலும், உருமாறிய கரோனாவால் அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் மருந்து ஏற்பு திறனின்றி அவர் உயிரிழந்தார். கறுப்பு பூஞ்சை நோயினால் அவர் இறந்தார் என்பது தவறான தகவல். கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறிப்பட்டாலும், அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் நம்மிடம் உள்ளன" தெரிவித்தார்.
சுகாதாரத் துறை செயலாளர் உறுதி
இச்சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன், தூக்குக்குடியில் இறந்தவர் கறுப்புப் பூஞ்சை நோயால் இறக்கவில்லை என்றும் அவர் கரோனா எதிர்வினை பாதிப்பு காரணமாகவே இறந்துள்ளார் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கரோனா 2ஆவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நோயால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை நோய் (மியூக்கோர்மைகோசிஸ்) தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் இந்த நோய் தாக்குதலுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது கரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஒரு சில மருந்துகள் எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்