தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடிக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு - வீரத்தாய் குயிலி

தூத்துக்குடிக்கு வந்த அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் என ஏராளமானோர் மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

மரியாதை
மரியாதை

By

Published : Feb 1, 2022, 9:24 PM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட ராணி வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி,

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மாமன்னர் பூலித்தேவன், தளபதி ஒண்டி வீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துகோன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வாகனம் வந்தடைந்தது.

தூத்துக்குடியில் குடியரசு தின அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு

அப்போது அலங்கார உறுதியை சமூகநலன்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மலர்த்தூவி வரவேற்றனர்.

பின்பு அலங்கார ஊர்தியில் வடிவமைப்பு செய்யப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்வையிட்டு அலங்கார ஊர்தி முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

அதேபோல், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலங்கார ஊர்தியை வரவேற்றனர். இந்நிகழ்வில் முன்னதாக பள்ளி மாணவ மாணவியர் பொதுமக்கள் என ஏராளமானோர் ஊர்திமுன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: மாணவர் சேர்க்கையின் பிறப்புச் சான்றிதழின்படி பெயர் பதிவு - பள்ளிக் கல்வித் துறை

ABOUT THE AUTHOR

...view details