தூத்துக்குடியில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டை 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளிய இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுக ஒரு தீய சக்தி. அது சுனாமியை போன்ற ஆபத்தான கட்சி. எனவே, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ, ரவுடியிசம் கந்துவட்டி போன்றவை இல்லாத நிலை ஏற்பட எங்களுக்கு வாக்களியுங்கள்.
திமுக சுனாமியை போன்று ஆபத்தானது - டிடிவி. தினகரன் - டிடிவி. தினகரன்
தூத்துக்குடி: மீனவர்களின் 28 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து பரதர் என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பரப்புரையின் போது உறுதியளித்துள்ளார்.
எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆறு பெரிய மீன்பிடி துறைமுகங்களிலும், 36 மீன்பிடி இறங்கு தளங்களிலும் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். மீனவர்களின் 28 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து பரதர் என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் - நடிகை ரோகிணி