தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய அரசின் திட்டங்களை வேறு பெயரில் செயல்படுத்தும் திமுக - அண்ணாமலை - அறிவார்ந்து யோசித்து செயல்படும் திறன் திமுகவிடம் இல்லை

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் திமுகவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Dec 15, 2021, 7:15 AM IST

தூத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் கேட்கிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4% கமிஷன் கேட்கிறார்கள்.

இவை அனைத்தையும் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிப்பதற்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே கட்சியை சேர்ந்த வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழ் மக்களே பேசத் தொடங்குவார்கள். அவர்களே அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை உருவாகும்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் திமுகவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றிய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசு அதிலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்க ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, கோவை மாவட்ட விவசாய பகுதியில் 3ஆயிரத்து 822 ஏக்கர் பரப்பளவில் தேவையின்றி தொழிற்சாலை அமைக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்க உரிமம் பெறுவதிலிருந்து தொழிலில் வருவாய் ஈட்டும் வரையில் திமுக அரசு கமிஷன் கேட்டு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்.

தமிழ்நாடு அரசின் கடன் சுமைகளுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க முடியாது. தமிழ்நாட்டில் வருவாய் அதிகரிக்கக்கூடிய புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. அதன் வெளிப்பாடே சமீபகாலமாக ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் மிக சிறப்பாக செயல்பட கூடிய திறன் காவல் துறைக்கு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்

ABOUT THE AUTHOR

...view details