எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை களைகட்டியுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தேர்தலின் முக்கிய அங்கமான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி திமுகவில் வேகம் எடுத்துள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், பொருளாளருமான டி.ஆர். பாலு எம்.பி. தலைமையில் மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி, கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது, தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவருடனும் கலந்தாலோசித்து, அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது.