தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சைக்கிள் ஓட்ட தனிப்பாதை - தூத்துக்குடி மாநகராட்சி திட்டம்! - தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஓட்டுவதற்கென தனி வழிப்பாதை அமைக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

challenge
challenge

By

Published : Oct 17, 2020, 11:00 AM IST

மாசில்லா தூத்துக்குடியை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், துணை ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு சைக்கிள்களில் பயணம் செய்தனர். நகரின் முக்கிய சாலைகள் வழியே நடந்த இப்பேரணியில், மோட்டார் வாகன பயன்பாட்டைத் தவிர்ப்பதை வலியுறுத்தியும், சைக்கிளில் பயணித்தால் ஏற்படும் நன்மைகளை மக்களிடையே பரப்பும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, “ தூத்துக்குடி மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாசில்லா தூத்துக்குடியை உருவாக்கும் பொருட்டு ’சைக்கிள் ஃபார் சேலஞ்ச்’ என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சைக்கிள் ஓட்டுவதற்காகவே தனி வழிப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம் ” என்றார்.

சைக்கிள் ஓட்ட தனி வழி - தூத்துக்குடி மாநகராட்சி திட்டம்

இதையும் படிங்க: கரோனா வந்தா பயப்பட வேண்டாம்... நாடக கலைஞர்களின் விழிப்புணர்வு நாடகம்

ABOUT THE AUTHOR

...view details