தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடி முதல் நாள்; திருச்செந்தூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - ஆடி முதல் நாள்

ஆடி மாத முதல் நாளையொட்டி, ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் கூட்டம்

By

Published : Jul 17, 2022, 6:37 PM IST

தூத்துக்குடி:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருவிழா நாட்களைத் தவிர நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மாதத்தில் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆடி மாதப்பிறப்பு மற்றும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டணம் தரிசனம், பொது தரிசனம் என இரண்டு தரிசனம் வரிசை மட்டுமே உள்ள நிலையில் முதியவர்களுக்கு சிறப்பு தரிசன வழியும் கடந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் தங்களின் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை அல்லது வாகன ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து தரிசனம் செய்து கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஆடி முதல் நாள்; திருச்செந்தூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10 சிலைகள் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details