மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 18ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் - தற்போதைய தூத்துக்குடி செய்திகள்
தூத்துக்குடி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
CPI protest against farmers law at Thoothukudi
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.