தூத்துக்குடி: விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற ஏர் கலப்பை ஏந்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார்.
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார். பின்னர், ஏர் கலப்பையை கையில் ஏந்தி நெல்லை - திருச்செந்தூர் சாலையில் காங்கிரஸ் கட்சியினரும், விவசாயிகளும் பேரணியாக சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்டடோரை ஶ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.