தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு! - Collector senthil raj

தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Collector senthil raj press meet in tuticorin
Collector senthil raj press meet in tuticorin

By

Published : Nov 23, 2020, 6:42 AM IST

வருகின்ற சட்டப் பேரவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளர்கள் இடம்பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்துகொள்ள ஏதுவாகவும் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "இந்த முகாம்களில் மாற்றத்திற்காக விண்ணப்பிப்பவர் அவருடைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவை அனைத்துமே வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடக்கூடிய வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

புதிதாக சேர்க்கை அவருடைய பெயரும் வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடக்கூடிய இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

எனவே டிசம்பர் மாதம் இறுதியில் 18 வயது பூர்த்தியாக கூடியவர்கள் கூட இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாம்களில் விண்ணப்பங்களை கொடுக்க முடியாதவர்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தினசரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் அதனைப்பற்றி வழங்கலாம்.

முகாம்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் சேவை மையங்களில் சென்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details