தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

73ஆவது குடியரசு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தையொட்டி, தூத்துக்குடி காவல்துறையில் 78 பேருக்கு முதலமைச்சர் விருதுகளும், சிறப்பாகப் பணியாற்றிய 46 பேருக்குச் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நாட்டின்
நாட்டின்

By

Published : Jan 26, 2022, 6:45 PM IST

தூத்துக்குடி:இந்திய நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தையொட்டி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, நாட்டில் சமாதானத்தைப் பரப்பும் வகையில் வெண் புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிறப்பு விருதுகள்

நிகழ்ச்சியில் அடுத்ததாக, மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 78 பேருக்கு முதலமைச்சர் விருதுகளையும், சிறப்பாகப் பணியாற்றிய 46 பேருக்குச் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் வழங்கினார்.

குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்

தொடர்ந்து, வருவாய்த் துறை, முன்னாள் படை வீரர் நலம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, வேளாண்மைத் துறை,

இந்திய மருத்துவத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, நகராட்சி, பேரூராட்சி, தொழிலாளர் நலத்துறை, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணி புரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் வழங்கிப் பாராட்டினார்.

துறைமுகத்தில் குடியரசு தினம்

இதைப்போல தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்பு கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துறைமுக சபைத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், ஆபத்துக் காலங்களில் தொழில் பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விளக்க நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார்.

நலத்திட்டங்கள்

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் முதியோர் இல்லங்கள் பயன்பாட்டுக்கென ரூ.2.50 லட்சம் செலவில் கட்டில், மெத்தை, சானிட்டரி நாப்கின், சக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவியிடம் வழங்கினார்.

மாநகராட்சியில் கொடியேற்றம்

நாட்டின் 73ஆவது குடியரசு தின விழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, மாநகராட்சியில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

பணியாளர்களுக்கு சீருடை

அத்துடன், கரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகளும், பேரிடர் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் ஆகியவற்றை ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்.

இதைப்போல, தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள ஒரு நபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் ஒரு நபர் ஆணைய விசாரணை அலுவலரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான அருணா ஜெகதீசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்: நாஞ்சில் சம்பத், நெல்லைக் கண்ணன், பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details