தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலை நேரத்தை நீட்டிப்பதா? கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - citu protest on 100 days work scheme

தூத்துக்குடி: 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நேரம் நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

citu protest on 100 days work scheme
citu protest on 100 days work scheme

By

Published : May 28, 2020, 3:48 PM IST

100 நாள் வேலை திட்டத்தில் இரண்டு மணி நேரம் வேலை அதிகரிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பெருமாள்பட்டி கிளைச் செயலாளர் லெனின் குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் பணி நேரத்தை உயர்த்துவதை உடனே ரத்து செய்ய வேண்டும், வேலைக்கான அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை முழுமையாக கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details