தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: சிசிடிவி வெளியீடு - எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் துரத்திச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானது
சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானது

By

Published : Nov 25, 2021, 4:48 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சாரதி (எ) பார்த்தசாரதியை (35) நேற்று (நவம்பர் 24) அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள், கத்தியால் தாக்கி கொலைசெய்தனர்.

இதுகுறித்து தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கொலையாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முத்துகணேஷ், காவல் துறை அடங்கிய தனிப்படையின் கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலைசெய்யப்பட்ட பார்த்த சாரதிக்கும் செல்சினி காலனியைச் சேர்ந்த மாரிமுத்து (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகள்

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாரிமுத்து, மாரிமுத்துவின் உறவினரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (20) ஆகிய இருவரும் சேர்ந்து பார்த்த சாரதியை அரிவாள், கத்தியால் தாக்கி கொலைசெய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாரிமுத்து, கார்த்திக் ஆகிய இருவரையும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் தனிப்படையினர் தேடிவந்த நிலையில் இன்று இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகள் பார்த்தசாரதியை அரிவாள், கத்தியால் செல்சினி காலனி பகுதியில் விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Farm Laws: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details