கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆறு மாதங்களாகவே விசைப்படகு மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் 13 கடற்கரை மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் அத்தியாவசிய பணிகளுக்கு அரசு விலக்களித்து உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளுடன் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஆழ்கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், ஆகவே, இன்று முதல் மூன்று நாள்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.