தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர். செ. ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது. அதிமுக கட்சிக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்துவருகிறோம்.