தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தாலான நாய், மான், ஆடு பொம்மைகள் கண்டெடுப்பு - தொல்லியல் ஆராய்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தாலான நாய், மான், ஆடு பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 8:54 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள் மற்றும் மரத்தாலான கைப்பிடிக் கொண்ட கத்தி உள்ளிட்டப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்ற கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் அகழாய்வு பணியில் இன்று (செப்.26) வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தாலான கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தன. இந்த சங்க கால வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு பணியில் இதுவரை 85-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது ஆய்வாளர்கள் மத்தியில் தொடர் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதியுடன் நிறைவு பெற உள்ள இந்த அகழாய்வு பணியில் தொடர்ந்து அருங்காட்சியப் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

இதையும் படிங்க: வடக்குப்பட்டு அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details