தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி

தூத்துக்குடி: "புதிய கல்விக் கொள்கையில் எதிர்க்கட்சியினர் இரட்டை வேடத்தை வெளிக்கொண்டு வர திமுகவினர் நடத்தும் பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்துவோம்" என பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.

'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி
'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி

By

Published : Aug 26, 2020, 9:21 PM IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பற்றி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தையும், அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை: ஆசிரியர்களிடம் கண்துடைப்பு கருத்து கேட்பு - பழ. நெடுமாறன் கண்டனம்!

தொடர்ந்து பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கபட நாடகம் ஆடி வரும் திமுகவினர் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தற்போது வரையும் மும்மொழி கொள்கையை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே அவர்களின் இரட்டை வேடம் குறித்து தெளிவுபடுத்த திமுகவினர் நடத்தும் பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் பேட்டி

மேலும், "இந்த போராட்டத்தில் மும்மொழி கொள்கை குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கள் கேட்க உள்ளோம். மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழ் மொழியை மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் எடுத்து செல்லமுடியும்" இவ்வாறு பேசினார்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க கல்வியாளர்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details