தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. வாழைக்காய், வாழை இலை உள்ளிட்டவை தூத்துக்குடி காமராஜர் மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், மாவட்டத்தில் பெய்த அதிக பருவமழை காரணத்தால் வாழை விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததில் வாழை சரியான பருவத்திற்கு வரவில்லை, மகசூலும் குறைவாகவே உள்ளது, வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.
300 ரூபாய்க்கு விற்ற வாழை தார், இரட்டிப்பு விலையாக இம்முறை 500 மற்றும் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரஸ்தாளி ஒரு தார் ரூபாய் 800க்கும், கற்பூரவல்லி ரூபாய் 900க்கும், ஒட்டுக்காய் ரூபாய் 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.