தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை இன்று (ஜூலை 12) சந்தித்து மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூச்சுக்காற்றை நச்சுக் காற்றாக்கி மண்ணையும் மக்களையும் அழித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜனை உற்பத்தி என்கிற போர்வையில் மீண்டும் ஆறு மாதத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
சட்டம் இயற்ற வேண்டும்
மாநில அரசு இதற்கு உள்பட கூடாது அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திடக் கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். அதே நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற, சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
தூத்துக்குடியின் மத்தியப் பகுதியில் இந்த மண்ணுக்காக, மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 15 பேரின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். அதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 90 நபர்களின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.