துாத்துக்குடியில் உலக புகழ்பெற்ற துாய பனிமய மாதா ஆலயத்தின் 437ஆம் ஆண்டு திருவிழா ஜூலை 25ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி திருச்சிலுவை சிற்றாலயத்திலிருந்து பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் மாதாவின் புகழ் கீதம் பாடி, கொடி பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய ஆண்டு விழா! - மாதா ஆலயம் ஆண்டு விழா
தூத்துக்குடி: உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா ஆலய ஆண்டு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
![தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய ஆண்டு விழா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3948084-thumbnail-3x2-church.jpg)
Basilica of Our Lady of Snows church
இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட என அனைவரும் கலந்துகொண்டனர். தூய பனிமய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தூத்துக்குடி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தூத்துக்குடியில் தூய பனிமய மாதா ஆலய ஆண்டு விழா!