கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 9) தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி விவிடி சிக்னலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை காவலர்கள் எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.