தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தாட்கோ மூலம் தனித்தனியாக விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.
வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தலா ரூபாய் 251.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி மேட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் ஆதி திராவிட நல மாணவர் விடுதியையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், இந்த விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கி படிக்கலாம் என கூறப்படுகிறது. ஆய்வின் போது கட்டிடங்கள் தரமாக கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ”முதலமைச்சர் பொறுப்பேற்றத்திலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்காக 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்த பட்டு வருகின்றன.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி தமிழ்நாட்டில், 320 பழங்குடி நல பள்ளிகள் 1,138 ஆதிதிராவிடர் நல பள்ளிகள் உள்ளது. இது அனைத்தும் கடந்த ஆட்சியில் பராமரிக்கவில்லை. இதனை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு சீரமைக்கப்படும்” என்றார். ஆய்வின்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் நிஷாந்தினி, தனி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் திமுக கட்சியினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:தன்னம்பிக்கையுடன் படித்தாலே போதும்.. நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவனின் டிப்ஸ்...