தூத்துக்குடி தொகுதியில் இன்று, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சுந்தரை ஆதரித்து, அக்கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் சிவன் கோவிலில் வழிபாடு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
’சினிமா பட போஸ்டர்கள் போன்றது திமுக அதிமுகவின் இலவச அறிவிப்புகள்'
தூத்துக்குடி: திமுக அதிமுகவின் இலவச அறிவிப்புகள் சினிமா பட போஸ்டர்கள் போல இருப்பதாக சமக முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.
அப்போது, ”மக்கள் நீதி மய்யத்துடனான நம் கூட்டணி ஏதோ தேர்தலுக்கான கூட்டணி அல்ல. மாற்றத்திற்கான கூட்டணி. தமிழக மக்களுக்கு தேவையான மாற்றத்தை இக்கூட்டணியால் தான் கொடுக்க முடியும். மக்களுக்கு இலவச அறிவிப்புகள் வழங்குவது என்பது, படம் வெளியாவதற்கு முன்பே ஒட்டப்படும் போஸ்டர் போன்றது. அந்த போஸ்டரை பார்த்து இன்னொருவர் அதைவிட பெரியதாக தயாரித்து ஒட்டுவார். அதைப்போலத்தான் இரண்டு கட்சிகளும் மாறி மாறி இலவச அறிவிப்புகளை அறிவித்துள்ளன. ஆனால், மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க:கரோனா காலத்தில் வெறும் ரூ.1000 கொடுத்து வஞ்சித்தவர்கள் அதிமுக - மமக வேட்பாளர் தாக்கு