தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மு.க.ஸ்டாலின் முடங்கிப்போயுள்ளார்’ - நத்தம் விஸ்வநாதன் - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

தூத்துக்குடி: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

viswanathan
viswanathan

By

Published : Jan 2, 2021, 5:11 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரைக்காக நாளையும், நாளை மறுநாளும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வர உள்ளார். அங்கு கோவில்பட்டி, வில்லிசேரி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். இந்நிலையில், முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபடும் இடங்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், ” முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வரக்கூடிய தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றியை பறைசாற்றும் விதமாக மக்கள் கூட்டம் காட்சி அளிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முடங்கிப் போய் கிடக்கிறார். தன்னைத்தானே முடக்கிக் கொண்டு இருக்கிறார். மீடியாக்கள் மூலம் மட்டுமே மக்களை சந்தித்து விட முடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

’மு.க.ஸ்டாலின் முடங்கிப்போயுள்ளார்’ - நத்தம் விஸ்வநாதன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆங்காங்கே களத்தில் இறங்கி மக்களை நேரில் சந்திக்கிறார். விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறார். ஆனால் ஸ்டாலின் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் சந்திக்கிறார். வீடியோ மூலம் விவசாயம் செய்ய முடியுமா? செய்தித்தொடர்பு ஊடகங்கள் முக்கியம்தான். ஆனால் ஊடகங்கள் மூலம் மட்டுமே அரசியல் செய்வது சரியாக இருக்காது. களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பது தான் வெற்றியை தேடித்தரும். அந்த வகையில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 இடங்களில் முதலமைச்சர் மக்களை சந்திக்கவுள்ளார்” என்றார். உடன், அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் கட்சியினர் இருந்தனர்.

இதையும் படிங்க: விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்: திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details