தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெல்டிங் பட்டறையில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - Kovilpatti

கோவில்பட்டியில் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வெல்டிங் பட்டறையில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு
வெல்டிங் பட்டறையில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

By

Published : Sep 15, 2022, 2:19 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (24), விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் டிக்கரிங் & வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

இவருடைய ஒர்க் ஷாப்பில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி என்ற 9-ம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுவன் விடுமுறை தினங்களிலும் பள்ளி முடித்த மாலை நேரங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.

வழக்கம் போல ஒர்க் ஷாப் சென்டர் குருமூர்த்தி தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்த கடையின் உரிமையாளர் பால்ராஜ், குருமூர்த்தியை காப்பாற்ற மின் ஒயரை இழுத்த போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து கையில் ரத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல்நிலைய காவல்துறையினர் மின்சார விபத்து குறித்து வெல்டிங் ஒர்க் ஷாப்-ன் உரிமையாளர் பால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பத்து வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு...

ABOUT THE AUTHOR

...view details