தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: எல்கேஜி மாணவன் உயிரிழப்பு - நான்கு குழந்தைகள் காயம் - தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி பள்ளி மாணவன் உயிரிழந்தான். மேலும் நான்கு குழந்தைகள் காயம் அடைந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து
ஆட்டோ கவிழ்ந்து விபத்து

By

Published : Jun 27, 2022, 12:05 PM IST

Updated : Jun 27, 2022, 12:25 PM IST

திருநெல்வேலி மாவட்டம் வெட்டியபந்தி பகுதியிலிருந்து கேடிசி நகர் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு 9 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று இன்று(ஜூன்.27) காலை புறப்பட்டது. வசவப்பபுரம் - செய்துங்கநல்லூர் சாலையில் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய ஐந்து வயது செல்வ நவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 4 பேர் காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

உயிரிழந்த சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் செல்வ நவீன் கேடிசி நகர் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Viral Video - குடிபோதையில் பெண் தகராறு

Last Updated : Jun 27, 2022, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details