தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொல்லியல் துறைக்கு சொந்தமான கிரில் கேட்டுகள் திருட்டு- மூவர் கைது

தொல்லியல் துறைக்கு சொந்தமான கிரில் கேட்டுகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

3-were-arrested-for-archaeological-department-grill-gate-theft
தொல்லியல் துறைக்கு சொந்தமான கிரில் கேட்டுகள் திருட்டு- மூவர் கைது

By

Published : Aug 30, 2021, 6:48 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூரில் உள்ள ஒன்றிய அரசு தொல்லியல் துறைக்கு சொந்தமான 12 கிரில் கேட்டுகள் கடந்த 16,18 ஆகிய தேதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு குறித்து விசாரித்த காவலர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், டாட்டா ஏஸ் வாகனத்தில் திருடப்பட்ட கிரில் கேட்டுகளை கொண்டுசென்றது தெரியவந்தது. ஆனால் வாகன எண்ணோ, வாகனத்தை கண்டறியக்கூடிய அடையாளங்கள் எதுவும் சிசிடிவி கேமராவில் தெரியவில்லை.

இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடத்தி, மகாதேவன்குளத்தைச் சேர்ந்த உதயகுமார்(31), திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், 16ஆம் தேதி 4 கிரில் கேட்டுகளையும், 18ஆம் தேதி 8 கிரில் கேட்டுகளையும் திருடி வாகனத்தில் ஏற்றி சென்றதையும், திருடிய கிரில் கேட்டுகளை பழைய இரும்புக்கடை வியாபாரியான இட்டாமொழி தெற்கு தெருவைச் சேர்ந்த அருள்ராஜ்(34) என்பவரிடம் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, அருள்ராஜை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், திருடப்பட்ட 12 கிரில் கேட்டுகளையும் உருக்கி இரும்பு ராடுகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது.

பின் அவரிடமிருந்து இரும்பு ராடுகளாக உருக்கி வைக்கப்பட்டிருந்த 1840 கிலோ எடையுள்ள 10 ராடுகளையும், திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 2 டாட்டா ஏஸ் வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் பரபரப்பு; போலி நாகமாணிக்க கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details