தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி செவன்த் டே பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (வயது 40) மற்றும் தூத்துக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்த முரளிதாஸ் காந்தி (40) ஆகியோர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி வடபாகம்
தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
முரளிதாஸ் காந்தி, முனியசாமி இருவரும் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் பலமுறை ஈடுபட்டதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் ஒப்பதலின்பேரில் முனியசாமி மற்றும் முரளிதாஸ் காந்தியை வடபாகம் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.