தமிழ்நாட்டில் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றரை மணி நேரத்தில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.