திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள செல்போன் டவரின் மீது இளைஞர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையறிந்த பொதுமக்கள், அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த இளைஞரை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் இறங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக செல்போன் டவர் மீது ஏறி கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கல்லிடைகுறிச்சி காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வைராவிகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (27) என்பதும் இவர் சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.